நிரந்திரம் இல்லா இவ்வுலகத்தில்
உயிரை தவிர ஒன்றும் இல்லை இழப்பதற்கு
நிலையானது என்று ஒன்றும் என்னிடம் நிற்கவில்லை
நிம்மதி இழந்து காலங்கள் ஆகிவிட்டன
உதடுகள் மட்டுமே சிரிக்கின்றன
உள்ளம் ஒரு போதும் சாந்தம் அடைவதில்லை
ஓட்ட பந்தயம் என்ற விளையாட்டில்
நம்பிக்கை என்னும் வெற்றியை நோக்கி ஓடுகின்றேன்
மனசோர்வு உடல் சோர்வு ஏற்பட்டாலும்
பொறுப்புகளையும் கடமைகளையும் மனதில் கொண்டு
வலி தெரியாமல் ஓடுகிறேன்
இறுதியில் வாழ வேண்டும் இல்லை சாக வேண்டும் !
:-[