ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => கதைகள் மற்றும் நாவல்கள் => Topic started by: Administrator on May 01, 2024, 03:26 PM

Title: நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா?
Post by: Administrator on May 01, 2024, 03:26 PM
குட்டித் தவளைகள் இரண்டு குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அங்கு ஆழம் அதிகமான ஒரு பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.

தாவிக் குதித்துக் கொண்டிருந்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.

தான் விழுந்தது பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை.

அந்தத் தவளை மிகவும் அவநம்பிக்கை கொண்டது. அதனால் அது தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாமலிருந்தது. பாலிற்குள் மூழ்கி அதனடிக்குச் சென்று உயிரை விட்டது.

இன்னொரு குட்டித் தவளையோ தான் அதிலிருந்து தப்பித்து விடுவோம் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தது.

அது பால் என்று தெரிந்தும் தன் கால்களைப் போட்டு, இங்கும் அங்கும் அடித்து உதைத்தது நீச்சல் போட்டது. பாலுக்குள் உந்தி..உந்தி நீந்திக் கலக்கியபடி இருந்தது.

பால் கலங்க ஆரம்பித்தது. அந்தப் பாலில் மேலாக ஆடை படரத் தொடங்கியது. அந்தத் தவளை மேலும்... மேலும்... உதைக்க... அந்தப் பாலின் மேலிருந்த ஆடை சிறிதுசிறிதாக வெண்ணைய்ப் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.

நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறியது, பின் அதிலிருந்து வெளியே தாவிப் பாய்ந்தது.

நம்பிக்கையுடையவன் செய்யும் செயல்கள் அவனுக்கு எப்போதும் வெற்றியைத் தேடித் தருகிறது.