ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Administrator on Jul 10, 2024, 12:21 AM

Title: நிம்மதி
Post by: Administrator on Jul 10, 2024, 12:21 AM
(https://thirudanchat.com/community/wp-content/uploads/mediapress/members/1/113/1_okNsOyrNE_h6cDJzwxg2Fw.jpg)

நிம்மதி தேடி ஓடும் இவ்வுலகில்
நான் தேடிய நிம்மதி எனக்கு கிடைக்கவே இல்லை
சொந்தங்களை தாண்டி
புரிந்துகொள்ளும் நண்பர்கள் எனக்கு கிடைக்கவே இல்லை
தவறான பழக்கமும் தர்மத்தின் நியதியும்
தாண்ட என் மனம் ஒரு போதும் முயன்றதே இல்லை
சொல்ல முடியாத துயரங்கள் என்னை துரத்தும் போதும்
வாழ்க்கை பயணத்தில் ஓடி கொண்டே இருக்கின்றேன்
என் சிரிப்புக்கு பின்னால் பல ரகசியங்கள் இருந்த போதும்
நான் இருக்கும் வரை யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை
நிஜ வாழ்க்கையிலும் இனைய தல வாழ்க்கையிலும்
நான் நிம்மதியாகவே இல்லை!!