ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Jun 18, 2025, 04:27 AM

Title: வருவாயா ?
Post by: Vedha on Jun 18, 2025, 04:27 AM
விடியா இரவைக் கேட்கவா ..?
மறையா சூரியன் கேட்கவா ..?

புல் நுனி பனி துளி கேட்கவா.. ?
வானின் மேகம் கேட்கவா ..?

விழி  மூடா கனவை கேட்கவா ..?
கனவில் உன்னை கேட்கவா ..?

அன்பே உனதன்பை  கேட்கவா. ?
அன்பாய் நான் மாறிட கேட்கவா.?

உயிரே உயிர் பிழைத்திட கேட்கவா..?
நீ இன்றி மரித்திட கேட்கவா ..?

கேள்விகள் மட்டும் என்னிடம் குடுத்து விட்டு ...
உயிர் வருடிச் சென்றாயே... !

இளைப்பாற வருவாயா ....?