ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on May 11, 2026, 01:36 PM

Title: புகைப்படம்
Post by: Vedha on May 11, 2026, 01:36 PM
புகைப்படம் என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு...
எங்கேனும் மலரையோ...
இயற்கை காட்சிகளையோ கண்டால்... சுயபடமோ
சுயபடமோ... புகைப்படமோ...
எடுத்து சேமித்து கொள்வாள்..
அவளை அன்றொரு நாள்
ஓர் அழகிய புகைப்பட சட்டம் ஈர்த்தது...
புகைப்படம் எடுக்க சென்ற அவள்
தயங்கி பின் தங்கினால்...
அன்னையர் தின வாழ்த்துக்கள்
பார்த்து....
செயற்கையாக புன்னகைத்து கொண்டு நகர்ந்து சென்றால்..
கனத்த மனதுடன்.... !