ThirudaN Chat Forum

General Category => Health and Medical Articles => Topic started by: nite owl on Jan 16, 2024, 12:11 AM

Title: பால் குடித்தால் இவ்வளவு நன்மையா
Post by: nite owl on Jan 16, 2024, 12:11 AM
உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிப்பது என்பது பல கலாச்சாரங்களில் தலைமுறைகளாக இருந்து வரும் பாரம்பரியம்.

மன அழுத்தம் தூக்கத்தை பாதிக்கும் என்பதால், அதிகமான மக்கள் இரவில் தூங்குவதில் சிரமப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, பலர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வீட்டு வைத்தியம் மற்றும் எளிதான தீர்வுகளை நாடுகின்றனர். அதில் ஒன்று தான் இரவில் பால் குடிப்பது.

அது நல்லதா என்பது யாரும் அறியாத ஒரு விடயம். ஆகவே இரவில் பால் குடித்து உறங்கினால் உடல் ரீதியாக எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

1. தூக்கம்

முதலில் இரவில் பால் குடிப்பதால் நல்ல தூக்கம் வரும் என்பது உண்மை தான். பாலில் ட்ரிப்டோபேன் மற்றும் மெலடோனின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவை அனைத்து நல்ல தூக்கம் வர உதவும்.

2. இரத்த சர்க்கரை குறையும்

பாலில் புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது தான் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவும்.

3. எடை குறையும்

பாலில் புரோட்டீன் அதிகமாக உள்ளதால் பசி எடுப்பது குறையும். இது ஒரு மெட்டபாலிச ஊக்கியாக காணப்படுவதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். உடல் எடையும் குறையும்.

4. எழும்பு வலுவாகும்

பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுவதால் அவை அனைத்துமே எலும்புகளின் வலிமைக்கு அத்தியாவசியமாக இருக்கும். வயதாகும் போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கும்.

5. மன அழுத்தம்

குறையும் நாள் முழுவதும் மன அழுத்தத்துடன் வேலை பார்த்து விட்டு எவ்வாறு மன அழுத்ததை குறைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா? இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பாலைக் குடித்தால், அதில் உள்ள குறிப்பிட்ட அமினோ அமிலம் மன அழுத்தத்திற்கு தீர்வை தரும்.