உள்ளங்காலில் நெய் மசாஜ் செய்வதால் நன்மை
உள்ளங்காலில் நெய் கொண்டு மசாஜ் செய்வதால் முகத்தில் பொலிவு கிடைப்பதுடன், சரும பிரச்சினைகளும் தீர்கின்றதாம்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், உள்ளங்கால்களில் நெய் கொண்டு மசாஜ் செய்தால் நல்ல தூக்கத்தினை பெறலாம்.
தூங்கும் போது குறட்டை விடுபவர்கள் இரவில் உள்ளங்கால் நெய்யினால் மசாஜ் செய்தால், குறட்டை தொல்லையிலிருந்து விடுபடலாம்.
முகம் சுருக்கம் நீங்க அழகு குறிப்புகள்
முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும்.
இது முக சுருக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து விடும்.
வறண்ட சருமம் பொலிவு பெற
முகம் வறண்டு போனால் நாம் வழக்கமாக மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்ஸ் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே அதற்கு பதிலாக முகத்திற்கு மாய்சரைசராக பாலை பயன்படுத்தலாம்.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க
தினமும் உடல் முழுவதும் பாலை தடவ வேண்டும். இதன் மூலம் சூரிய ஒளியினால் கேடு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்க முடியும்.அதாவது சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் தடிப்புகள், வறண்ட சருமம், சரும அரிப்புகள் போன்ற பிரச்சனையை சீர் செய்கிறது.மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கிறது.
Nei naanga samayal ku thaan use pannuvom....massage ku kuda use pannalama🤔....nei costly ah aache🙄