குதிக்கால் வெடிப்புக்கான தீர்வுகள்

Started by nite owl, Jan 15, 2024, 11:42 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

nite owl

விளக்கெண்ணெய்  ,தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள்  தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

தேனை வெடிப்பு பகுதியில் தடவி அரை மணி நேரம்  ஊற  வைத்து பின் கழுவ வேண்டும் . இப்படி தினமும் செய்து வந்தால் . குதிகால் வெடிப்பு நீங்குவதோடு பாதங்களுக்கு மென்மையாக இருக்கும்.

தினமும் இரவு தூங்கும்  முன் தேங்காய் எண்ணெய் பாதங்களில் தடவி வந்தால் பாத வரட்சியும் வெடிப்பும் நீங்கி விடும்.

ஆலிவ் ஆயிலை தினமும் பாதங்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் இளமையான தோற்றத்தை அளிக்கும்.

சுட்டு நீரில் காலை முதலில் கழுவ வேண்டும் மருதாணி இலையுடன் ,கிழங்கு மஞ்சளை அதனை காலில் பற்று போட்டால் நாளடைவில் வெடிப்பு நீங்கும்.