மௌனத்தின் மொழி

Started by Vedha, Oct 15, 2026, 01:51 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Vedha

மௌனத்தின் மொழி


சில வலிகளுக்குக் கண்ணீர் மொழியாகும்,
சில வலிகளுக்கு மௌனமே துணையாகும்...

சொல்ல நினைத்த வார்த்தைகள்
தொண்டைக்குள்ளேயே கரைந்துபோகும்,
புரிந்துகொள்வார் என்று காத்திருந்த இதயம்
ஒருநாள் பேசுவதையே மறந்துபோகும்...
எல்லோருக்கும் வெளிச்சம் தரும் நிலவு,
தன் இருளை யாரிடம் சொல்லும்?
எல்லோருக்கும் ஆறுதல் சொல்லும் மனம்,
தன் காயங்களை யாரிடம் பகிரும்?

வாழ்க்கை சில நேரம்
நாம் விரும்பியதைத் தருவதில்லை;
ஆனால் நாம் தாங்க முடியாது என்று நினைத்த

வலிகளைக்கூடக் கடக்கக் கற்றுத் தருகிறது...
உடைந்துவிட்டோம் என்று நினைக்கும் தருணத்திலும்,

நமக்குள் ஏதோ ஒன்று உயிர்ப்புடன் இருக்கிறது...
அதுதான் நம்பிக்கை! ❤️

நம்மைப் புரிந்துகொள்ள யாரும் இல்லாதபோதும்,
நம்மை நாமே புரிந்துகொள்ளத் தொடங்குவோம்...
ஏனெனில்,