பெண்களின் மாதவிடாய் சிக்கல் நிலைமை

Started by nite owl, Jan 15, 2024, 11:54 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

nite owl

பெண்களின் மாதவிடாய் பிரச்சனை 50 வயதுக்கு பிறகும் ஒரு 10 பெண்களில் 2-3 பெண்கள் என்ற விகாத்ததில் தொடரும். முக்கால்வாசி பெண்களுக்கு 50க்கு முன்பே மாதவிடாய் நின்று விடும். மேலும் அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால் மக்களுக்கு அது போலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். இது  மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல் நிலையை பொருத்தது தான் . மரபியல் சார்ந்தது கிடையாது.

முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்யநல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவை 13-17 வயதுள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். உடல் எடையை சீராக்க வேண்டும். உணவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணை , பதப்படுத்தப்பட்ட உணவு பிராய்லர் கோழி ,மிகவும் பட்டை தீட்டிய அரிசி , நூல்ட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வெவ்ண்டும், இரும்புச் சத்துள்ள பேரீச்சை , செவ்வாழை , மாதுளை பழங்களை கொடுக்கலாம்.
ஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய , ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரி விகிதத்தில் எடுத்து அதில் சிறிது சம நீரினை விட்டு உண்ணலாம்.

கருப்பை ஆரோக்கியத்திற்கு கருப்பை வீக்கத்தை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள்  கை  கொடுக்கும் கருப்பை ஆரோக்கியத்திற்கு வெப்ப இலைகளை பயன்படுத்தலாம் ஒரு  கைபிடி வேப்பிலை சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காப்பி தயாரித்து வாரத்தில் ஒரு நாட்களில் பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் ஆளிவிதைகளை சேர்த்து கொதிக்க வைத்து பருக்கலாம் பாலில் மஞ்சள் கலந்து தினமும் இருவேளை பருகுவதும் நல்லது .