நிம்மதி

Started by Administrator, Jul 10, 2024, 12:21 AM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Administrator



நிம்மதி தேடி ஓடும் இவ்வுலகில்
நான் தேடிய நிம்மதி எனக்கு கிடைக்கவே இல்லை
சொந்தங்களை தாண்டி
புரிந்துகொள்ளும் நண்பர்கள் எனக்கு கிடைக்கவே இல்லை
தவறான பழக்கமும் தர்மத்தின் நியதியும்
தாண்ட என் மனம் ஒரு போதும் முயன்றதே இல்லை
சொல்ல முடியாத துயரங்கள் என்னை துரத்தும் போதும்
வாழ்க்கை பயணத்தில் ஓடி கொண்டே இருக்கின்றேன்
என் சிரிப்புக்கு பின்னால் பல ரகசியங்கள் இருந்த போதும்
நான் இருக்கும் வரை யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை
நிஜ வாழ்க்கையிலும் இனைய தல வாழ்க்கையிலும்
நான் நிம்மதியாகவே இல்லை!!